Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித்தின் 'காதலாட' பாடலின் முழு வரிகள் இதோ:

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (01:00 IST)
அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்'' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 'சர்வைவா, மற்றும் தலை விடுதலை' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாடலான 'காதலாட' என்ற பாடல் வெளியாகியுள்ளது.



 
 
கபிலன் வைரமுத்து எழுதிய இந்த பாடலில் ரொமான்ஸ் சொட்ட சொட்ட இருப்பதால் இந்த பாடலை அஜித் ரசிகர்களும், காதலர்களும் ரசித்து வருகின்றனர். நமது நேயர்கள் இந்த பாடலின் முழு திருப்தியையும் பெறும் வகையில் இந்த பாடலின் வரிகளை இங்கு தந்திருக்கின்றோம். 
 
உன்னோடு வாழ்வது ஆனந்தமே..
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே..
தீராத தேவைகள் ஆனந்தமே..
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே..
 
பல்லவி
 
காதலாட காதலாட காத்திருந்தேனே..
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே..
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே...
 
சரணம்
 
நீலவானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே...
தேவகானம் தூய மெளனம்
நீ கொடுப்பாயே...
பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே..
நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே..
ஆலகால நஞ்சு பாய்ந்தது
மெல்ல மீள்வோமே..
பிள்ளை தெய்வம்
மண்ணில் தோன்றிட
வாழ்வு நீள்வோமே..
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments