Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஆண்டனி படத்தின் மூலம் சினிமாவுக்குத் திரும்பிய காதல் ஓவியம் பட நடிகர்!

vinoth
வியாழன், 13 பிப்ரவரி 2025 (08:42 IST)
அருவி படத்தின் இமாலய வெற்றி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.  அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையடுத்து அவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘சக்தி திருமகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம் ஆகும்.  இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் காதல் ஓவியன் கண்ணன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் திரைப்படம் வெற்றிப்பெறவில்லை. அதனால் அவர் அதன் பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது அவர் ‘சக்தி திருமகன்’ படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments