காதல் படத்தில் நடித்த நடிகை திடீரென மொட்டை அடித்து உள்ள நிலையில் அவர் சாமியார் ஆக போகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான காதல் என்ற படத்தில் பரத் மற்றும் சந்தியா நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் சரண்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், அதாவது சந்தியாவின் தோழி கேரக்டரில் நடித்திருந்த இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பேராண்மை உட்பட சில படங்களில் நடித்த சரண்யா சமூக வலைதளங்களிலும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா திருத்தணி கோயிலில் மொட்டை அடித்து வீடியோவை பதிவு செய்துள்ளார். தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதால் திருத்தணி முருகனுக்கு மொட்டை அடித்து உள்ளதாக அவர் கூறியுள்ள நிலையில் மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காதல் படத்தில் சின்ன பெண்ணாக இருந்த சரண்யாவா இப்படி என்று பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
Edited by Siva