Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியீடு

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (17:00 IST)
கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி உள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி ஜோடியாக சயீஷாவும், அவருடைய அத்தைப் பெண்களாகப் பிரியா  பவானிசங்கர், அர்த்தனா பினுவும் நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.   டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில்  இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இந்த படத்தின் டிரைலர் இன்று  மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.  இந்த டிரைலரை படத்தின் தயாரிப்பாளரும், கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா  வெளியிடுகிறார். படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments