இனிமேல் நான் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன் என நடிகர் கார்த்திக் ஒரு விழாவில் பேசியுள்ளார்.
பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்த நடிகர் கார்த்திக் அங்கு சரியாக செயல்படவில்லை. அதனால், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கினார். ஆனால், அதையும் அவர் சரியாக நடத்தவில்லை. அதன் பின் அவ்வப்போது சினிமாவில் தலை காட்டிக்கொண்டிருந்தார்.
கார்த்திக்கும், அவரது மகன் கௌதமும் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் “இதுநாள் வரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலில் இருந்து விலகியே இருந்தேன். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. இனிமேல், நான் முழுநேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்த்து வருகிறது.
நான் மட்டுமல்ல, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதிகளாக மாற வேண்டும்” என அவர் கூறினார்.