தெலுங்கு சினிமா ரசிகர்களால் ரவுடி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த 2017 ஆம் ஆண்டில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவை உலகம் முழுக்க திரும்பி பார்க்க வைத்தார்.
வித்தியாசமான காதல் கதையை மையமாக வைத்து இயக்குனர் சந்தீப் வாங்கா இயக்கிய இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் அற்புதமான நடிப்பு திறமையை ஒரே படத்தின் மூலம் வெளிப்படுத்தி காட்டிய விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் ஸ்கெட்ச் போட்டனர் .
ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்தில் விஜய் தேவகொண்டாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்த இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஆதித்ய வர்மா என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளியான இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி சாதனை படைத்துவருகிறது. இந்தி ரீமேக்கில்
முன்னணி நடிகர் ஷாகித் கபூர் மற்றும் நடிகை கைரா அத்வானி நடிப்பில் கபீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் இன்று ரூ 150 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மட்டும் ரூ 12.21 கோடி வசூலித்துள்ளது
மேலும் இப்படம் ரூ 146.63 கோடிகளை வசூல் செய்து சாதனை. மூன்றாம் நாளில் ரூ 51 கோடியையும் 5 ம் நாளிலேயே ரூ 100 கோடியை எட்டியும் சாதனை படைத்துள்ளது. இப்படியே சென்றால் அர்ஜுன் ரெட்டி சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.