Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கபாலி அப்டேட் - இளமை ரஜினி கொஞ்ச நேரம்தானாம்

கபாலி அப்டேட் - இளமை ரஜினி கொஞ்ச நேரம்தானாம்

கபாலி அப்டேட் - இளமை ரஜினி கொஞ்ச நேரம்தானாம்
, செவ்வாய், 28 ஜூன் 2016 (18:43 IST)
கபாலி படம் குறித்து அறிய தமிழகமே ஆவல் கொண்டுள்ளது. படத்தில் வயதான தோற்றம், இளமையான தோற்றம் என்று இரு கெட்டப்புகளில் ரஜினி வருகிறார்.


 
 
எண்பதுகளில் உள்ளது போன்ற ரஜினியின் இளமை கெட்டப்தான் படத்தில் அதிக நேரம் வருகிறது என்று சிலர் பதவிட்டனர். படக்குழுவிடம் பேசிய போது அது தவறு என்று தெரிய வந்தது. வயதான கெட்டப் ரஜினிதான் படத்தில் அதிக நேரம் வருகிறாராம். இளமையான ரஜினி இருபது முதல் முப்பது நிமிடங்கள் மட்டுமே வருகிறார்.
 
அதேபோல் படம் கிட்டத்தட்ட 3 மணிநேரங்கள் ஓடும் என்பதையும் படக்குழு மறுத்துள்ளது. எடிட்டிங் முடியும் முன்பே படத்தின் ரன்னிங் டைம் எப்படி தெரியும் என்று அவர்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
 
விரைவில் படத்தை தணிக்கைக்கு திரையிட்டு காட்ட முழுவீச்சில் வேலைகள் நடந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழில் இயக்கத்தில் உதயநிதி...?