Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டணம் குறிப்பிடாமல் தரப்படும் கபாலி டிக்கெட்டுகள்

கட்டணம் குறிப்பிடாமல் தரப்படும் கபாலி டிக்கெட்டுகள்

கட்டணம் குறிப்பிடாமல் தரப்படும் கபாலி டிக்கெட்டுகள்
, திங்கள், 18 ஜூலை 2016 (10:40 IST)
ரஜினி படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் பாக்கெட்டுகள் ஈவுஇரக்கமின்றி கொள்ளையடிக்கப்படும்.


 
 
திரையரங்குகளின் கவுண்டரிலேயே ஒரு டிக்கெட் 5,00 1000 ரூபாய்களுக்கு விற்கப்படும்.
 
சென்னையில் விநியோகிக்கப்பட்ட கபாலி டிக்கெட்களில் கட்டணத்தையே குறிப்பிடவில்லை. இவையெல்லாம் அரசாங்க முத்திரை இல்லாத போலி டிக்கெட்டுகள். இந்த திரையரங்குகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கபாலியை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தாணு வழக்கு தொடர்ந்ததும் நீதிமன்றம் உடனடியாக அதனை அங்கீகரித்து தீர்ப்பளித்தது. ஆனால், திரையரங்குகளில் நடக்கும் கொள்ளையை யார் தட்டிக் கேட்பது?
 
வரிச்சலுகை பெற்ற படங்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அரசும் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாணு போன்றவர்கள் இந்த கொள்ளைகைள் குறித்து பேசுவதேயில்லை. கொள்ளை பணம் அவர்களை நேரடியாகச் சென்று சேர்வதால் அவர்கள் எப்படி வாய் திறப்பார்கள்?
 
திரையரங்கு கட்டண கொள்ளையில் அரசு உணர்ச்சியற்ற எந்திரமாக இருப்பதுதான் மிகவும் கவலைதரும் வேதனைக்குரிய விஷயம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருமுகன் 'ஹலேனா' பாடல் டீசர் வீடியோ