Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி படத்தின் முதல் காட்சி மலேசியாவில் திரையிடப்பட்டது

Advertiesment
Kabali
, வியாழன், 21 ஜூலை 2016 (19:28 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்தின் முதல் காட்சி மலேசியாவில் திரையிடப்பட்டது.


 

 
கபாலி நாளை உலகம் முழுவதும் மொத்தம் 5000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
 
இந்திய நேரப்படி, முதல் பிரீமியர் காட்சி மலேசியாவில், இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. ஆனால் மலேசியா நேரப்படி இரவு 9 ஆக இருக்கிறது. எராளமான ரஜினி ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு திரை அரங்கத்திற்கு வந்திருந்தனர்.
 
மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும்  ‘பிரீமியர்’ காட்சி திரையிடப்பட்டுள்ளது. கணக்குப்படி, உலகிலேயே கபாலி படம் மலேசியாவில் முதல் காட்சியும், சிங்கப்பூரில் இரண்டாவது காட்சியும் திரையிடப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள 44 நகரங்களில் கபாலி படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. ஒரு தமிழ்படம் வெளிநாடுகளில் இந்த அளவுக்கு திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
 
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை காசி தியேட்டரில் நாளை அதிகாலை 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி