Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி திருட்டு டிவிடியை தடுக்க நீதிமன்றத்தில் தாணு வழக்கு

கபாலி திருட்டு டிவிடியை தடுக்க நீதிமன்றத்தில் தாணு வழக்கு

கபாலி திருட்டு டிவிடியை தடுக்க நீதிமன்றத்தில் தாணு வழக்கு
, வியாழன், 14 ஜூலை 2016 (18:00 IST)
கபாலி படத்தின் திருட்டு டிவிடி மற்றும் இணையதளத்தில் படம் திருட்டுத்தனமாக பதிவேற்றப்படுவது ஆகியவற்றை தடுக்க தயாரிப்பாளர் தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 


தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு...
 
தமிழ் திரைப்படங்கள் பல தயாரித்துள்ளேன். தற்போது பெரும் செலவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி என்ற படத்தை தயாரித்துள்ளேன். இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. பொதுவாக அண்மை காலங்களில் ஒரு புதிய திரைப்படம் திரைக்கு வந்த அடுத்த சில நிமிடங்களில், அந்த திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி விடுகிறது.
 
இதனால், பெரும் தொகை செலவு செய்து திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, திருட்டு சி.டி.யாக வெளிவந்து விடுகிறது. 
 
பொதுவாக இதுபோல திருட்டு சி.டி.க்களை வெளியிடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தீவிரமாக, கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.
 
இந்தியாவை பொருத்தவரை 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த சேவை வழங்கும் நிறுவனங்களில் சேவையை பெறும் நபர்கள் தான், இதுபோல திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இந்த 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், இதுபோல புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க முடியும்.
 
ஏற்கனவே, இந்தியாவின் மகள் என்ற திரைப்படம் இணையதளத்தில் வெளியானது. மத்திய அரசு, இணையதள சேவை வழங்கும் நிறுவனத்துக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததும், அடுத்த சில நொடிகளில் அந்த திரைப்படம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
 
எனவே, திருட்டுத்தனமாக வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனே இணையதளத்தில் இருந்து நீக்கவும், அந்த இணையதளத்தில் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வதை தடுக்கவும் மத்திய அரசாலும், மாநில அரசாலும் முடியும். ஆனால், இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்காததால்தான், பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகுகிறது. ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக சென்றடைகிறது.
 
எனவே, கபாலி படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இணையதளத்தில் வெளியிட 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி இணையதளத்தில் கபாலி படம் வெளியானால், இந்த இணையதள சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலக்கவரும் செல்வி ஸ்ரேயா