காலா டிரெய்லர்

திங்கள், 28 மே 2018 (19:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
அப்படத்தின் டீசர் மார்ச் 1 ந் தேதி வெளியானதையடுத்து, படத்தின் பாடல்களை மே 9-ந் தேதி தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் டீசரும் பாடல்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் காலா படத்தின் டிரெய்லரை இன்று இரவு 7.00 மணிக்கு வெளியிடப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்தார். அதன்படி தற்போது காலா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தயாரிப்பாளர்களை கதறவிடும் வடிவேலு?