Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படத்தின் கதை, தலைப்பு என்னுடையது - தொடங்கியது பஞ்சாயத்து

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (14:20 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள காலா படத்தின் மூலக்கதை தன்னுடையது என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி மும்பையில் தொடங்கியது. இப்படம், நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய கதை என ரஞ்சித் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
 
மேலும், அப்படத்தில் ரஜினி நடிக்கும் சில காட்சிகள் புகைப்படங்களாகவும் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்நிலையில், காலா படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் “காலா படத்தின் மூலக்கதை என்னுடையது. 1996ம் ஆண்டு கரிகாலன் என்ற தலைப்பில், அந்த படத்திற்கான பூஜையை நடத்தியுள்ளேன். தற்போது என் படத்தின் மூலக்கதை திருடப்பட்டுள்ளது. கரிகாலன் என்ற தலைப்பையும் நான் பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தினரை தொடர்புகொண்டேன். ஆனால், எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments