Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க பெ ரணசிங்கம் படத்தை கிழித்த ப்ளுசட்ட மாறன்… அவரை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர்!

Advertiesment
க பெ ரணசிங்கம் படத்தை கிழித்த ப்ளுசட்ட மாறன்… அவரை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர்!
, திங்கள், 5 அக்டோபர் 2020 (10:42 IST)
சமீபத்தில் ஓடிடி மற்றும் டிடிஎச்சில் ரிலிஸான க பெ ரணசிங்கம் படத்தை யுடியூப் விமர்சகர் ப்ளுசட்டமாறன் கடுமையாக விமர்சித்ததை அடுத்து அவருக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார் இயக்குனர்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி வழியாக ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள க\பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடி மூலமாக அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது.

ஜீ நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள இந்த படத்தை ஒரே சமயத்தில் டிடிஎச் மற்றும் ஓடிடியில் வெளியிட்டனர். அதன்படி அக்டோபர் 2 அன்று ஜீ ப்ளெக்ஸ் மற்றும் ஜி தொலைக்காட்சியில் 199 கட்டணத்தில் அந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரபல விமர்சகரான ப்ளுசட்ட மாறன் தன் பாணியில் இந்த படத்தைக் கண்டபடி விமர்சித்திருந்தார். படத்தை பார்க்கும் போதே தான் தூங்கிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் விருமாண்டி ‘உங்களைப் போன்ற அதிமேதாவிகளுக்கு ஒரு பெண் அவள் கணவன் மேல் வைத்திருக்கும் காதலைக் காட்ட முடியாது. அது போல வெளிநாட்டுக்கு வேலைக்கு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களின் கதிக்கு யார் காரணம்?. தைரியம் இருந்தா நேரலையில் விவாதம் நடத்தலாம்’ என சவால் விடும் விதமாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த கணவரின் கட் அவுட்டை வைத்து வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்!