Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்டர் மகேந்திரனுக்கு 16 படங்களில் வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் ! யார் தெரியுமா?

மாஸ்டர் மகேந்திரனுக்கு 16 படங்களில் வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் ! யார் தெரியுமா?
, சனி, 13 மார்ச் 2021 (11:44 IST)
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் சாதனை படைத்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாகவே ரஜினி, கமல்,  விஜய்காந்த், அஜித் மற்றும் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து 100 படங்களை தாண்டி நடித்தார். ஆனால் வளர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்த போது அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் இப்போது அவருக்கான வாய்ப்புகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இவரை நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் கமர்ஷியல் கிங் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். அந்த படத்தில் இவர் நடித்த பஞ்சாயத்து சீன் செம்ம ஹிட் ஆனதால் மகேந்திரனும் பிரபலம் ஆனார். அதிலிருந்து தான் இயக்கும் எல்லா படங்களிலும் மகேந்திரனுக்கு கே எஸ் ரவிக்குமார் வாய்ப்புக் கொடுக்க ஆரம்பித்தாராம். இப்படி கிட்டத்தட்ட 16 படங்களில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடினாலே மொக்கைப் படங்கள்தானா? ரசிகர்களை ஏமாற்றிய டெடி!