Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் படத்தின் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் படத்தின் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!
, ஞாயிறு, 15 ஜனவரி 2017 (15:00 IST)
நீண்ட இடைவெளிக்கு பிரகு 36 வயதினேலே படத்தின் மூலம் சினிமாவிற்கு திரும்பிய நடிகை ஜோதிகா. தற்போது, பிரம்மா  இயக்கத்தில் ஜோதிகா மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா,  பானுப்ரியா, ஊர்வசி ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

 
நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி நடித்து வரும் மகளிர் மட்டும் படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஜோதிகா, பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் புல்லட் பைக் ஓட்டும் பெண்ணாக நடித்திருக்கிறார் என்று சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ஆவணப்படம் எடுக்கும் பெண்ணாக ஜோதிகா நடித்துள்ளார். ஆவணப்படும் எடுக்கும்  போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படம் என்று அவர் கூறியுள்ளார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை  அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.
 
பிரம்மா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ. ஆர். ரகுமான் இசையில் காட்டுச் சிறுக்கி பாடலை பாடிய ஸ்ருதி ஹாசன்!