Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ. ஆர். ரகுமான் இசையில் காட்டுச் சிறுக்கி பாடலை பாடிய ஸ்ருதி ஹாசன்!

ஏ. ஆர். ரகுமான் இசையில் காட்டுச் சிறுக்கி பாடலை பாடிய ஸ்ருதி ஹாசன்!
, ஞாயிறு, 15 ஜனவரி 2017 (14:25 IST)
மணி ரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் 2010-ஆம் ஆண்டு 'ராவணன்' படம் வெளியானது.  ஏ. ஆர்.  ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற 'காட்டுச் சிறுக்கி' என்ற பாடல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

 
இந்நிலையில் ’எம்.டிவி அன்பிளக்டு’ என்ற நிகழ்ச்சிக்காக இந்த பாடலை மறு உருவாக்கம் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ,அந்த  பாடலில் ஸ்ருதி ஹாசனை பாட வைத்துள்ளார். தமிழில் காட்டுச் சிறுக்கி என துவங்கும் இந்த பாடல், ஹிந்தியில்  ‘ரான்ஜா..ரான்ஜா’ எனத் துவங்கும்.இந்த ஹிந்தி பாடலைத்தான் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியானது இன்று  இரவு 8 மணியளவில் எம் டிவியில் ஒளிப்பரப்பட உள்ளது.
 
ராவணன் படத்தில் வெளியான காட்டு சிறுக்கி பாடலை அனுராதாவும் ஷங்கர் மகாதேவனும் பாடுயிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியீடு!