Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காக்க காக்க படத்தில் என்னை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார் ஜோதிகா- சூர்யா பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (09:10 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் இந்த வாரம் வெள்ளிக் கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இதையடுத்து நேற்று படத்தின் ரிலீஸ் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. படத்துக்காக சூர்யா இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது தன்னுடைய திரைவாழ்க்கைப் பற்றி மனம் திறந்து பேசி வருகிறார்.

அப்படி ஒரு மேடையில் “நானும் ஜோதிகாவும் காக்க காக்க படத்தில் நடித்த போது என்னை விட ஜோதிகாவுக்கு மூன்று மடங்கு சம்பளம் அதிகம. அப்போதுதான் நான் என் வாழ்க்கையில் எங்கிருக்கிறேன் என்பது தெரிந்தது.  ஒருவர் என் வாழ்க்கையில் சேர்ந்து பயணிக்க தயாராகும் போது நாம் சம்பாதிக்கிறோம் என்று யோசிக்கத் தொடங்கினேன். நிறைய சம்பாதித்து அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதெல்லாம் நடந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments