Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிகாவின் மகளிர் மட்டும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகாவின் மகளிர் மட்டும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:43 IST)
ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாகத் தயாரித்துள்ளார்.

 
ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். திருமணத்துக்குப் பின்  சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, தன்னை முதன்மைப் படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்தப்  பாணியில் மகளிர் மட்டும், பாலா இயக்கியுள்ள நாச்சியார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் மகளிர் மட்டும் படம் செப்டம்பர் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மோகன் லால்?