Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (11:06 IST)
‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸ் தேதி
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என்றும், இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. அவற்றில் முதல் படியாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது 
 
இந்த நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2 தாங்களாக புதிய திரைப்படங்கள் எதையும் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பதும், இதனை அடுத்து மேலும் சில புதிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments