Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவரா தோல்வியால் அதிருப்தி.. ரசிகர்களைக் குறை சொல்லும் ஜூனியர் என் டி ஆர்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2024 (19:02 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான ‘தேவரா’கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.  இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் பிறகு படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் வசூல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால் படம் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய என் டி ஆர் “இப்போதெல்லாம் ரசிகர்களிடம் எதிர்மறை எண்ணம் அதிகமாகி விட்டது. ஒரு படத்தை வெகுளியாக, அப்பாவியாக ரசிப்பது இல்லாமல் போய்விட்டது.  நான் என் குழந்தைகளோடு படம் பார்த்த போது அவர்கள் வெகுளியாக ரசித்தார்கள். ஆனால் ரசிகர்கள் அப்படி இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது எல்லாம் ஒரு படத்தை ஆராய்ச்சி செய்யவே பலரும் பார்க்கிறார்கள்.” என ரசிகர்களை குறை சொல்ல ஆரம்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங் லுக்கில் சமந்தாவின் லேட்டஸ்ட் ஆல்பம்!

ரித்து வர்மாவின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நித்யா மேனன்!

தேவரா தோல்வியால் அதிருப்தி.. ரசிகர்களைக் குறை சொல்லும் ஜூனியர் என் டி ஆர்!

அடுத்த கட்டுரையில்
Show comments