Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? ரவீந்தருக்கு தான் அதிகமா?

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (18:20 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படும் நிலையில், விஜய் டிவி சீரியலில் நடிக்கும் போட்டியாளர்களான அருண், அர்னவ், சத்யா, வி.ஜே. விஷால், ஜாக்லின், பவித்ரா ஜனனி, சுனிதா, அன்ஷிதா, தர்ஷா, குப்தா, தர்ஷிகா ஆகியோர்களுக்கு தினமும் ரூ.20 ஆயிரம் சம்பளம் என கூறப்படுகிறது. 
 
மகாராஜா திரைப்படத்தில் நடித்ததால் பிரபலமான சாச்சனாவுக்கும், சின்னத்திரை நடிகர் தீபக் ஆகிய இருவருக்கும் மட்டும் 30,000 சம்பளம் என்று தெரிகிறது. மேலும், முத்துக்குமார், ஜெஃப்ரி, சௌந்தர்யா ஆகிய மூவருக்கும் தினமும் 10,000 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில், சினிமா பிரபலங்கள், தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் நடிகர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் 50,000 சம்பளம் என்று கூறப்படுகிறது. கடந்த சீசனில் சில போட்டியாளர்கள் தினமும் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நிலையில், இந்த சீசனில் அதிகபட்சமாக 50,000 மட்டுமே சம்பளம் என்பதால், பட்ஜெட் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
 
Edited by siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments