கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் அந்த படத்தின் பூஜை நடந்தது. விரைவில் ஷூட்டிங் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சலார் மற்றும் தேவரா ஆகிய படங்லளின் தோல்வியே இந்த முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் தொடங்கப்படுவது உறுதி என்றும் இன்னொரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் என் டி ஆர் அளித்த ஒரு பேட்டியில் “பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன கதை பிடித்ததால்தான் அந்த படத்தில் நடிக்கிறேன். ஆர் ஆர் ஆர் படம் மேற்கத்திய ரசிகர்களுக்குப் பிடித்தது என்பதால் அவர்களை மேலும் கவரவேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு கதைகளைத் தேர்வு செய்வதில்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.