ஜுலை 10 விக்ரம் மகளின் திருமண நிச்சயதார்த்தம்
ஜுலை 10 விக்ரம் மகளின் திருமண நிச்சயதார்த்தம்
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் 10 -ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
கெவின் கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித், அக்ஷிதா திருமணத்தை இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜுலை 10 -ஆம் தேதி நடக்கிறது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர்.
அடுத்த வருடம் இவர்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.