பிக்பாஸ் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர் ஜூலி. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜூலி அல்லது வையாபுரி இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜுலி, மக்களால் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாசில் இருந்து வெளியேறிய ஜூலி சேப்பாக்கம் அருகில் பரணியை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி செல்ல முயல்கிறார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு சூழ்ந்து கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து பரணி அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். இதன் ரசிகர்களிடம் சிக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனால் ஜூலி வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கிறார்.