Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

மலையாள சினிமா
vinoth
திங்கள், 23 செப்டம்பர் 2024 (08:29 IST)
கடந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் ஆஸ்கர் விருதின் பட்டியலில் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் தேர்வாகவில்லை. இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க லைகா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் லைகா நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கப் போவதில்லை என்ற செய்தி அடிபடுவதால் ஜூட் ஆண்டனி வேல்ஸ் நிறுவனத்தோடு ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ஜூட் ஆண்டனி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments