Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் அறிமுகமாகும் மற்றொரு தமிழ் ஊடகவியலாளர்!

சினிமாவில் அறிமுகமாகும் மற்றொரு தமிழ் ஊடகவியலாளர்!
, வியாழன், 5 ஜனவரி 2023 (09:39 IST)
கார்த்தி நடிப்பில் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் திரைப்படம் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து  மூன்று ஹிட்களைக் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவி நடைபெற்றது.

இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இப்போது நடந்துவரும் நிலையில் இந்த படத்தில் செய்தியாளர் செந்தில் வேல் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கார் வாங்கி குஷியில் குதூகலித்த விஜே பார்வதி - வீடியோ!