Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று ஒன்றும் இதுவரை கிழிக்கவில்லை: பத்திரிகையாளர் மணி

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (13:53 IST)
நடிகர் கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்பி ஆக இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பத்திரிகையாளர் மணி, "இதுவரை நாடாளுமன்றம் சென்ற நடிகர்கள் யாரும் ஒன்றும் கிழிக்கவில்லை. கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
 
சிவாஜி கணேசன், திலீப் குமார், ரேகா உள்பட பல நடிகர்கள், நடிகைகள் பாராளுமன்றத்துக்கு ராஜ்ய சபா எம்பி ஆக சென்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் பேசவே நேரம் கிடைக்கவில்லை. நேரம் கிடைத்தாலும், பெரிய அளவில் பேசவில்லை.
 
அதேபோல், சச்சின் டெண்டுல்கர், இளையராஜா போன்றவர்களும் நாடாளுமன்றத்தில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
"கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா பதவி கொடுத்திருப்பதை நான் மதிக்கிறேன். ஒரு கலைஞனாக அவர் ராஜ்ய சபாவிற்கு போவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவரது அரசியலில் எனக்கு எந்தவித மரியாதையும் இல்லை," என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
"கமல்ஹாசன் ஒரு உயர்ந்த நடிகர், மரியாதைக்குரிய நடிகர். அவருக்கு கிடைத்த கௌரவம் ஆகவே நான் இதைப் பார்க்கிறேன். இந்த பதவியை அவர் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

நிர்வாணமாக கூத்தடிக்க தனியா ஒரு கேரவன்.. ஒரு நடிகருக்கு 6 கேரவன்! - பாலிவுட்டை விளாசி தள்ளிய இயக்குனர்!

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தேனிசை தென்றல் தேவா! - வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments