Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:34 IST)
நடிகை ஜோதிகா நடித்துள்ள 'காற்றின் மொழி' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சுதந்திர தினமான நேற்று வெளியானது.

 
ஹிந்தியில்  வித்யாபாலன் நடிப்பில் வெற்றி பெற்ற 'துமாரி சுலு' படத்தின் ரீமேக்காக  'காற்றின் மொழி'  வருகிறது. இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.
 
ராதாமோகன் இயக்கத்தில் ஏற்கனவே  வெளிவந்த 'மொழி' படத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்ணாக ஜோதிகா நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
 
இந்நிலையில், இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்திருக்கும் 'காற்றின் மொழி' படத்தில் வித்தார்த் மற்றும் லஷ்மி மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிம்பு கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்துக்கு இசை - ஆர்.எச். காஷிப்
 
இதையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ஜோதிகா பெண்களுக்காக 10 கட்டளைகள் என குறிப்பிட்டவாரு இருக்கும் பாதைகையை இருகைகளில் ஏந்தியாவாறு உள்ளார்.
 
ஜோதிகா கூறும் பெண்களுக்கான கட்டளைகள்
 
1. உன் விருப்பம்போல் உடை உடுத்துவாயாக
 
2.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக
 
3.உன் கணவர் உன்னை ஒரு கண்ணத்தில் அறைந்தால், மறு கண்ணத்தை காட்டாதிருப்பாயாக
 
4.நீ விரும்பியதை செய்வாயாக
 
5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக
 
6.வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக
 
7.நீ சம்பாதித்து உன் விருப்பம்போல் செலவு செய்வாயாக
 
8.நீ விரும்பாதபோது வற்புறுத்தலுக்கு சம்மதிக்காமல் இருப்பாயாக
 
9.மனதில் பட்டதை சொல்வாயாக
 
10.ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்குவா தோல்வியால் சுக்குநூறான சூர்யாவின் பாலிவுட் கனவு… கைவிடப்பட்ட கர்ணா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

சிம்புவின் ‘மாநாடு’ மூன்றாம் ஆண்டு தினம்.. சுரேஷ் காமாட்சியின் நெகிழ்ச்சியான பதிவு..!

தயாரிப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டாரா ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன்?

ஸ்ரீதேவி எப்போதும் அழகு பற்றிய கவலைகளில் இருந்தார்… கணவர் போனி கபூர் மனம்திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments