Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

ஆம்பர் ஹெர்ட் கொடுக்கும் இழப்பீட்டை என்ன செய்யப் போகிறார் தெரியுமா ஜானி டெப்?

Advertiesment
Hollywood
, வியாழன், 15 ஜூன் 2023 (14:41 IST)
நடிகர் ஜானி டெப், பிரபல நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை திருமணம் செய்துகொண்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை அதன் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. 2017ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டார்கள்.

அதன்பின்னர் 2019ல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய ஆம்பர் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் குடும்பவன்முறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ஜானி டெப் மீது விமர்சனங்களை எழவைத்தது. அதன் காரணமாக அவர் நடித்த பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

இது சம்மந்தமாக தொடர்ந்த வழக்கில் ஜானி டெப் வென்றார். அவருக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு ஆம்பர் ஹெர்ட்டும் சம்மதித்தார். இந்நிலையில் இப்போது ஆம்பர் ஹெர்ட் வழங்கும் பணத்தை சில அறக்கட்டளைகளுக்கு தானமாக கொடுக்க முன்வந்துள்ளார் ஜானி டெப்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் டிரைலர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட தகவல்!