Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த்தின் ‘ஜானி’ படத்தின் டிரெய்லர் வெளியானது

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (18:43 IST)
அருண்ராஜ் வர்மாவின் ‘சாகசம்' படத்திற்கு பிறகு ‘டாப் ஸ்டார்' பிரசாந்த் நடித்துள்ள படம் ‘ஜானி'. இப்படம் 2007-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்' படத்தின் ரீமேக். 
 
நீல் நிதின் முகேஷ் நடித்திருந்த இந்த படம் அங்கு மெகா ஹிட்டானது. இதன் ரீமேக்கில் பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி டூயட் பாடியுள்ளார் .
 
மேலும், பிரபு, சாயாஜி ஷிண்டே, அசுதோஷ் ரானா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘நான், எமன்' புகழ் இயக்குநர் ஜீவா ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். ‘ஸ்டார் மூவீஸ்' நிறுவனம் சார்பில் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இதனை தயாரித்துள்ளார்.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  தற்போது, படத்தின் டிரெய்லரை பிரஷாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மக்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments