ஹாட்ஸ்டார் சோலியை முடிக்கும் ஜியோ சினிமா! – HBO உடன் பேச்சுவார்த்தை!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (13:37 IST)
தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா அடுத்த கட்டமாக பிரபல ஹெச்பிஓ கண்டெண்டுகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பிரபலமான இருந்து வரும் ஓடிடி தளங்களில் ஹாட்ஸ்டாரும் ஒன்று. இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமை ஹாட்ஸ்டாரிடம் இருந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வரும் நிலையில் கோடிக் கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஐபிஎல் முடிவடைவதற்குள் மேலும் பல வீடியோ கண்டெண்டுகளை அதிகரிக்க ஜியோ சினிமா திட்டமிட்டு வருகிறது. சமீப காலம் வரை ஹெச்பிஓ மேக்ஸ் தொடர்கள் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் ஹெச்பிஓ – ஹாட்ஸ்டார் இடையேயான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து ஹெச்பிஓ தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பெற ஜியோ சினிமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக பிரபலம் வாய்ந்த கேம் ஆப் த்ரோன்ஸ், லாஸ்ட் ஆப் அஸ், வெஸ்ட் வோர்ல்ட் ஆகிய பல தொடர்கள் ஹெச்பிஓ வசம் உள்ளதால் ஐபிஎல்லிற்கு பிறகும் ஜியோ சினிமாவின் வாடிக்கையாளர்களை அதிகரிக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments