ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஃபேமஸான ஷெரில், விஜய் படத்தில் நடிக்கலாம் என ஒரு வதந்தி உலா வருகிறது.
ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு டான்ஸ் ஆடியதன் மூலம், ஒரே நாளில் தமிழக இளைஞர்களைக் கவர்ந்து விட்டார் கேரளாவைச் சேர்ந்த ஷெரில்.
சில தமிழ் மீடியாக்கள், நேரடியாக கேரளாவுக்கே சென்று அவரைப் பேட்டியெடுத்தன. அப்போது, தமிழில் விஜய் மற்றும் அஜித்தைப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் ஷெரில்.
அத்துடன், படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கும், ‘நல்ல கதையாக இருந்தால் நடிக்கத் தயார்’ என்றும் கூறியிருக்கிறார். தற்போது பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிகுமார், அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் ஷெரில் நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது.