Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா ஜோதிகா நடித்த ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோவாக கவின்?

சூர்யா ஜோதிகா நடித்த ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோவாக கவின்?

vinoth

, திங்கள், 3 ஜூன் 2024 (08:09 IST)
தமிழ் சினிமாவில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த கடைசி படமாக அமைந்தது ஜில்லுனு ஒரு காதல். 2006 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு  முன்னதாக அவர்கள் ஜோடியாக நடித்து ரிலீஸான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். அப்போது அந்த படம் பிளாப் ஆனாலும், அதன் பின்னர் அந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆகின. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளூம், ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் இன்றும் ரசிக்கப்படுபவையாக உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, இப்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க கிருஷ்ணா ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த படம்தான் ‘ஜில்லுனு ஒரு காதல் 2’ ஆக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருடன் வெற்றியால் சூடுபிடிக்கும் லெஜண்ட் சரவணனின் அடுத்த படம்… ஷூட்டிங் எப்போது?