Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே

ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே
, செவ்வாய், 26 டிசம்பர் 2017 (09:54 IST)
ஜீவா நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார்.
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியால், ஷாலினி பாண்டேவுக்கு பல வாய்ப்புகள்  குவிகின்றன.
 
அதுவும் தமிழில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’  படத்தில் நடித்துவரும் ஷாலினி, ஜீவா ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
 
தற்போது சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்துள்ள ஜீவா, அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இது ஜீவாவின்  29வது படம். டான் சாண்டி இயக்க, சாம் சி.எஸ். இயக்குகிறார். ரூபன் எடிட் செய்கிறார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு  தொடங்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘மாரி 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?