படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கன்னு – அரசியல் நய்யாண்டியாக கவனம் ஈர்க்கும் ஜீவா பட டீசர்!

vinoth
சனி, 18 அக்டோபர் 2025 (09:01 IST)
தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து ஹிட்ஸ்களைக் கொடுத்தவர் ஜீவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தக் கதைகள் சொதப்பியதால் தற்போது மார்க்கெட்டிலேயே அவர் இல்லை. அதனால் மீண்டும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் மலையாளத்தில் ‘பேலிமி’ என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் ‘தலைவர் தம்பியின் தலைமையில்’ என்ற அரசியல் நகைச்சுவை படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள “படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடான்னு” என்ற வசனம் சமீபத்தைய தமிழக அரசியல் சூழலை நய்யாண்டி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கலகலப்பான டீசராக வெளியாகியுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments