Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகர்தண்டா -2 பட டீசர் அப்டேட் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (20:51 IST)
'ஜிகர்தண்டா 2 'படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து,  இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.  சந்தோஷ்  நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இப்படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில்,  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதன்படி,  வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி  நண்பகல் 12.12 மணிக்கு ஜிகர்தண்டா 2 டீசர் வெளியாகும் என்று தெரிவித்து, புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளார், இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments