Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தோடு மோதும் ஜிகர்தண்டா 2!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (08:41 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

இதன் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 36 நாட்களில் பெரும்பகுதி ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஊட்டிக்கு அருகே கிராமத்தில் சுமார் 100 குதிரைகள் மற்றும் 1000 ஜூனியர் நடிகர்களுடன் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடத்தினார். இப்போது சென்னைக்கருகே ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments