கமல் மேல் கோபமான ஜெயகாந்தன் குடும்பத்தினர்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:37 IST)
நடிகர் கமல்ஹாசன் மேல் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் குடும்பத்தினர் கோபமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தின் பெயரில் அசோக் செல்வன் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இதே பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலும், திரைப்படமும் உள்ளன. இந்நிலையில் அந்த பெயரை பயன்படுத்த அவரது குடும்பத்தினர்களிடம் அனுமதி வாங்காமல் இப்போது படம் உருவாகிறது. அதை கமல்ஹாசன் வெளியிட ஜெயகாந்தனின் மகள் தீபலஷ்மி தனது சமூகவலைதளப் பக்கத்தில் இது சம்மந்தமாக கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஜெயகாந்தனின் நாவல் மற்றும் படத்தின் தலைப்பான உன்னைப்போல் ஒருவன் தலைப்பை தன் படத்துக்கு வைக்கும்போது கமல் இதுபோல அனுமதி இல்லாமல் செயல்பட்டதால் இப்போது ஜெயகாந்தன் தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments