Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நாரப்பா பார்த்து அப்செட் ஆன ஜி வி பிரகாஷ்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:29 IST)
தமிழில் தனுஷ் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் ‘நாரப்பா’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் அசுரன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களையும், தீம் மியுசிக்கையும் பயன்படுத்தியுள்ள தெலுங்கு படக்குழுவினர் அதற்காக ஜி வி பிரகாஷுக்காக எந்த தொகையும் கொடுக்கவில்லையாம். தமிழில் தயாரித்த கலைப்புலி தாணுவே தெலுங்கு படத்தையும் தயாரித்துள்ள நிலையில் இவ்வாறு பணம் எதுவும் கொடுக்காமல் பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜி வி பிரகாஷ் பயங்கர அப்செட் ஆகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments