Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடி யார் தெரியுமா?
, புதன், 30 மே 2018 (11:49 IST)
‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற விவரம் கிடைத்துள்ளது.



பத்திரிகையாளரான ராஜு முருகன், ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, அரசியலைக் கேள்வி கேட்கும் ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். இந்நிலையில், தன்னுடைய மூன்றாவது படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

‘ஜிப்ஸி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில், ஜீவா ஜோடியாக பிரபல மாடல் அழகி நடாஷா சிங் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ‘மிஸ் அருணாச்சலப் பிரதேசம்’ பட்டம் வென்ற இவர், ‘மிஸ் இந்தியா’ போட்டியின் பைனலில் பங்கேற்றவர்.

இந்தப் படத்தில், பழமைவாதக் குடும்பத்தில் இருக்கும் கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாக நடிக்கிறாராம் நடாஷா சிங். ஹீரோவைப் பார்த்துக் காதலில் விழுந்ததும், அவர் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதுதான் படத்தின் கதையாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழம்பெரும் தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்