ஜீவாவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்
ஜீவாவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்
மலையாளத்தில் வாய்ப்புகள் இல்லாத லட்சுமி மேனனுக்கு தமிழில் வாய்ப்பு மழை கொட்டுகிறது. அதுவும் முன்னணி நடிகர்களுடன். விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து ஜீவாவுடன் நடிக்க உள்ளார்.
இயக்குனர் அருண் ஜீவாவை வைத்து இயக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் லட்சுமி மேனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒரு எமோஷனல் த்ரில்லர். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதையும், கதாபாத்திரமும் பிடித்துள்ளதால் லட்சுமி மேனன் அனேகமாக இந்தப் படத்தில் நடிக்கலாம். ஆனால், இன்னும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது முக்கியமானது.