‘டிக் டிக் டிக்’ படத்திற்கு, ஜெயம் ரவி மகன் ஆரவ் தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற பெருமையுடன் தயாராகி வரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆரவ் தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஆரவ் டப்பிங் பேசும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் ஜெயம் ரவி.