இரண்டு மாதங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவியின் ‘சைரன்’!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:03 IST)
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சைரன் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது.

இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் மோசமான வசூலை பெற்று வரும் நிலையில் இந்த படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments