ஜெயம் ரவி நடித்துவரும் ‘டிக் டிக் டிக்’ படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி – சக்தி செளந்தர்ராஜன் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்பேஸ் படம் இது. நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க, ஆரோன் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மகனான ஆரவ், இந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
விஜய்யின் ‘தலைவா’ படத்தைத் தயாரித்த நேமிசந்த் ஜபக், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படம், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படம் இன்னும் தியேட்டரில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.