நடிகர் ஜெயம் ரவிக்கு மலேசியாவை சேர்ந்த உலக வங்கி ஒன்ரு ஏதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது.
தனி ஒருவன் படத்திலிருந்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிப்பது ஜெயம் ரவி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மலேசியாவை தலைமையாக கொண்ட மேபேங்க் (Maybank) என்னும் வங்கி அவருக்கு ஒரு டெபிட் கார்டு வழங்கியுள்ளது. அதில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறார் ஜெயம் ரவி. மேலும், கின்னஸ் சாதனை செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.