Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (07:42 IST)
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘என்னை இழுக்காதடி’ வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து ஜெயம் ரவியின் படங்கள் தோல்வி அடைவதால் அவர் இந்த படத்தைப் பெரிதும் நம்பியுள்ளார்.

இந்நிலையில் விடாமுயற்சி ரிலீஸ் பொங்கலில் இருந்து பின்தள்ளப் பட்டதால் தற்போது இந்த படம் பொங்கல் அன்று ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments