Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி பிஸ்னஸா? ஜெயம் ரவியின் கம்பெக்காக அமையுமா ‘ஜீனி’?

vinoth
புதன், 10 ஏப்ரல் 2024 (09:33 IST)
ஜெயம் ரவியின் 32 வது திரைப்படமாக ஜீனி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் பிஸ்னஸ் தொடங்கியுள்ளது. படத்திற்கு ரிலீஸுக்கு முன்பே 60 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயம் ரவி கேரியரில் இதுவரை எந்தவொரு படத்துக்கும் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?! அசத்திய அஜித்குமார் மகன் ஆத்விக்! - வைரலாகும் வீடியோ!

‘அவதூறுகளுக்குத் தயாராக இருங்கள்… அஜித் சார் இதைதான் சொன்னார்’ – மகிழ் திருமேனி சொன்ன சம்பவம்!

90 கோடி ரூபாய் நஷ்டம்.. அப்போதுதான் விஜய் கைகொடுத்தார்- மாஸ்டர் தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

த்ரிஷா கூட டேட்டிங் செய்தேன்…ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை.. ராணா ஓபன் டாக்!

வெற்றிமாறன் & கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments