Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியின் இறைவன் புதிய ரிலீஸ் தேதி இதுவா?

ஜெயம் ரவியின் இறைவன் புதிய ரிலீஸ் தேதி இதுவா?
, திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (11:33 IST)
ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

என்றென்றும் காதல் மற்றும் மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடியாததால் இந்த படம் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அந்த தேதியில் மார்க் ஆண்டனி மற்றும் சந்திரமுகி 2ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த வாரிசு!