ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (18:40 IST)
ஜெயம் ரவி நடிப்பில் உருவான அகிலன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக பட குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் மேலும் ஹரிஷ் உத்தமன் தன்யா ரவிச்சந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கல்யாண் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த பூலோகம் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படம் வரும் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதி குறித்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
 
ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் அவருடைய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments