நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ஜேஆர் 30. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த படத்துக்கு பிரதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த போஸ்டர் ஒரு கொரியன் படத்தின் போஸ்டரின் அட்டைக்காப்பி என விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்த நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை மட்டும் சுமார் 35 கோடி ரூபாய்க்கு ஜி நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பல படங்களின் ஓடிடி வியாபாரம் திக்குமுக்காடி வரும் நிலையில் ஜெயம் ரவியின் இந்த படத்துக்கு மிகப்பெரிய வியாபாரம் நடந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.